இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
மாணிக்கவாசகர் திருபெருந்துரையில் குருத்தை மாற நிழலில் குருவடிவாய் ஈசன் கட்டளை இட்டு அருளியபடி அடியவர்களுடன் ஓரி இடத்தில் சிவபெருமான் திருவடிகளை செய்து வழிபட்டு வருகையில் பொய்கையில் எழுந்து தீயில் அடியவர்கள் மூழ்கியதும் தான் மூழ்காமல் சிவபெருமான் இயம்பியவாறு உத்திர கோச மங்கை சென்று எண்வகை சித்தியும் பெற்று தேவர்கள் வரம் வேண்டி இறைஞ்சம் தெய்வீக வளம் பொருந்திய திருகழுகுன்றினை அடைந்தார்.
சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியவாறு வழகாதிருந்து அளவிலடன்காத தம் திருஉருவத்தை காட்டியருளினார். கானுதற்கரிய அக்காட்சியினை கண்டு கண்களில் ஆனந்த கண்ணீர் பொழிய நின்று யாவரிடத்திலும் மாறுபாடில்லாத திருபெருந்துரையில் வீற்றிருக்கும் பெருமானே உன்னுடைய திருபெயர்களை எடுத்தியம்புகின்றவர்களுக்கு நிகரற்ற சிறந்த பேரின்பம் உண்டாகும். எமது தலைவனாகிய நீ துயரங்களை ஒழித்து தனிதன்மை உடைய பிறவி விதையானது மேலே விளையாதபடி இருவினை யொப்பு எனக்கு வந்த பிறகு அளவிலடந்காத உனது திருவடிவத்தை திருகழுகுன்றத்தே எழுந்தருளி வந்து கான்பித்தருளினை. மாணிக்கவாசகர் இத் தலத்தில் சில நாட்கள் தங்கி இருந்து தாம் திருபெருந்துரையின் அடியவர்களுடன் வழிபட்ட திருவடிகளை திருமலையின் மீது ஏறும் வழியில் அருகு வைத்து மண்டபம் கட்டி வழிபட்டார். இதற்கு அறிகுறியாக திருமலையின் மீது ஏறும் வழி தொடங்கும் இடத்தில் மேல்புறத்தில் மண்டபமும் அதில் சிவபெருமான் திருவடி நிலைகளும் மாணிக்கவாசகர் திருவுருவமும் இருக்கின்றன.