இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
சுந்தரர் தாண்டக நாடாகிய தொண்டை நாட்டில் ஈசன் மகிழ்ந்துறையும் இடங்கள் தோறும் தொழுது வண்டு ஒலிக்கும் முல்லை நிலங்களையும் குறிஞ்சி நிலங்களும் கடந்து எட்டு திக்குகளிலும் உள்ளவர்கள் வந்து தொழும் கழுகுன்றினை அடைந்தார். தேன் நிரம்பிய மலர் சோலைகள் சூழ்ந்த திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருதொன்டர்கள் மிகுந்த வியப்புடன் மகிழ்ந்து எதிர்கொள்ள எழுந்தருளி வெண் திங்களை அணினத் சுடர் கொழுந்தை வேதகிரி பெருமானை வணங்கி துதித்து இனிய இசையினுடைய திருபதிகம் பாடினார். தண்டமாந்த் திருநாட்டுத் தனிவிடையர் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர்கொண்டனைத் தொழுது போய் தூய நதி வண்டறையும் புலவு மலை மருதம் பல கடந்தே என்டிசையோர் திருகழுகுன்றை எய்தினார். தேனார்ந்த மலர் சோலை திருகழுகுன்றத் தடியார் ஆணாத விருபினேடும் எதிர் கொள்ள அடைந்தருளி துனால் வெண் மதியணிந்த சுடர்க் கொழுந்தை தொழுநிறைஞ்சி பாநாடும் இன்னிசையின் திருப்பதிகம் பாடினார்.
தேவர்களுக்கு தலைவனாகிய ஈசனது இடம் பிடி யானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய கழுக்குன்றமே அதனை பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயலால் பலரும் பல இகழுரைகளை சொல்லுமாறு இழி வெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்கதற் போருட்டுப் பலகாலம் செண்டு வணங்கு மின்கள். வேதகிரி பெருமானின் அருள் தோற்றம் முதலியவற்றை தெளிவு பட எடுத்துகூறி உலகத்தவர் தாங்கள் செய்த பாவங்களையும் போக்கிக்கொண்டு நற்கதியடைய வழிகாட்டு பதிகமாக் பாடியருளினார். சுந்தரர் வேதகிரி பெருமானிடம் பொன் பெற்றார்.இது கலம்பகத்திலும் உலா சிலேடை வெண்பா முதலியவற்றிலும் உள்ளது.