இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
நந்தி தேவர் ஈசனின் திருவடிகளை வணங்கி விடைபெற்று இமயமலையை கடந்து கங்கையில் மூழ்கி வழியில் உள்ள தளங்களை வணங்கி வேதகிரியை நோக்கி வந்தனர். வேதகிரியின் மலையை கண்டு வணங்கி அரகர வென்று துதி செய்து அடியேன் பாவனைகள் நீங்கி விட்டன. என்று ஒலியை எழுப்பி கொண்டு வரும் வழியில் பாலி நதியை கண்டு அதில் மூழ்கி வேதகிரியை அடைந்தார். அம்மலை வேதமலை என்றும் இது நம்மையாளுமையுடைய ஈசனது திருமேனி என்றும் அதன் மீது ஏறாதுபலமுறை வளம் வந்து அம்மலையின் சாரலின் அருகே போய் அதன் மேற்கு திசையில் ஒரு தடாகம் இருக்க கண்டு அதனை அடைந்தார். அந்த தடாகம் சுற்றிலும் தருக்கள் சூழ பெற்றதாய் தாமரை மலர்கள் குளிர்ச்சி நீர் பரபினதாய் ஈசன் மலையுமாகிய இரண்டு காட்சியினயும் போல வேத சொருப மாகிய மலையின் நிழலும் பெருமை பொருந்திய அம்மலையின் வீற்றிருக்கும் ஈசனுடைய நிழலும் சேர்ந்து விளங்கியது.
நந்திதேவர் உருத்திரகோடியர்கள் அருசித்த தீர்த்தம் அத்தீர்த்தம் என்பது உணர்ந்து இத்தீர்த்தத்தில் மூழ்கி தாமரை எடுத்து நம் ஈசனுடைய திருவடிகளை பூசித்தால் யாவரும் சிவபதம் அடைவார்கள் எனக்கருதி அத்தடாகத்தை வணங்கினார். அவர் அத்தீர்த்ததில் மூழ்கி நீரினாலும் மலர்களினாலும் பூசை செய்து அத்தடாகத்தின் கரையில் அமர்ந்து ஓவியம் போலிருந்து ஆறு தேவ வருடம் தவம் இயற்றினார்.