திருஞானசம்மந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணுருவாக செய்து திருவான்மியூர் இறைஞ்சி திருவிடைச்சுரம் வந்து மரகத வண்ணனை கண்டு அதிசயித்து போற்றி இவர் வண்ணம் என்னே என்ற துதித்து பதிகம் பாடி உமையொருபாகர் அருள் பெற்று சிறந்த தொண்டருடன் எழுந்தருளி "செந்துருத்தி " அறைந்தளிகள் பயில்சாரல் திருகழுகுன்றினை அடைந்தார்.
நிறைந்து ஆராத அன்பினுடன் திருவிடைசுர நாதரின் அருள் பெற்று செந்துருத்தி எனும் புன்னை பாடும் வண்டினங்கள் உறையும் சாரல்களுடைய கழுகுன்றினை அடைந்தார். அவ்வாறு அடையும் போது திருகழுகுன்றத்தில் உள்ள திருதொன்டர்கள் எதிர் கொண்டு வணங்கினர். திருகழுகுன்ற தொண்டருடன் தம் தொண்டர்கள் புடை சூழ மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த திருமலையை வளம் வந்து ஒளியைஉடைய திருகழுகுன்றத்தில் அமர்ந்து செம்பொன் மாயமான ஒப்புயர்வற்ற குன்று போன்ற இறைவரை மிகுந்த அன்பு பெருக்கினால் பணிந்தெழுந்து தமக்கு ஞானபாலுட்டிய ஞான்று தாம் துதித்த ஓங்கார ஒலியுடைய தோடு எனும் சொல்லினை நினைவு கூர்வார் போல் இறைவன் அம்மை அப்பனாக விளங்கி மிகவும் அன்பு கொண்டு உறையும் இடம் திருக்கழுக்குன்றே என்று வலியுறுத்தும் தமிழ் மாலை பாடினார். திருஞானசம்மந்தர் வேதகிரி பெருமானை கண்டு தரிசித்து ஒரு காதில் தோடு உடையவன் மற்றொரு காதில் தூய குழையுடையவன் என்று உமையோடு பாகவனாகத் துதித்து இறைவன் மிக்க அன்பு கொள்ளும் இடம் கழுக்குன்றே என்று பாடியுள்ளார்.
தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும் நாடுடையா னள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
வின்னுலகத்தவரும் மன்னுலகத்தவரும் துதிக்கின்ற கொன்றை மாலையும் சூடிய இறைவன் மிகுந்த அன்பு கொள்ளும் இடம் கழுக்குன்றே என்றுதேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பொன் மகன் தன்னை ஒரு பாகம் பிணையல் செய்தான் என்றும் பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் இனையல் செய்ய என்றும் பெண் மகள் தனோடு ஒரு பாகம். காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே என்றும் அருளியதால் ஞானசம்பந்தர் இங்கு இறைவனை உமையொரு பாகனாகவே தரிசித்தார்.