இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
தேவேந்திரனிடம் தேவ மங்கை ஒருத்தி பந்தினை ஒரு ஆடவன் பறித்து கொண்டு வெள்ளி மலையை அடைந்தான் என்று கூறி முறையிட்டாள். இந்திரன் இறக்கம் கொண்டு அந்த ஆடவன் அடியை குறித்துக்கொண்டு நாடி கயிலையை அடைந்தான். ஈசன் ஒரு இளைஞன் போலவும் பார்வதி ஒரு கன்னி போலவும் வடிவங்கொண்டு திருவிளையாடல் புரிந்தார்கள். ஈசனின் மாறுவேடத்தை அறியாத இந்திரன் பந்தினை அவர் கவர்ந்ததாக கூறி பந்தினை கேட்டான் ஈசன் அவன் வார்த்தைகளை செவி சாய்க்காமல் இருந்தார்.இந்திரன் கோபங்கொண்டு அவரை தன் வச்சிராயுத்தை ஓங்கினான்.
இறைவன் கடைக்கண் பார்வையினால் இந்திரன் அசைவற்று கையசைக்க முடியாமல் சிலை போல நின்றான்.ஈசன் அங்கிருந்த தோழியை இந்திரனை மலைகுகையில் சிறை படுத்தும் படி கட்டளையிட்டு அருளினார்.அதனால் இந்திரன் மிகவும் வருந்தினான் தேவ உலகில் இந்திரனை கானது தேவர்களும் தேவகுருவும் கயிலையை அடைந்தநற். ஈசனை வணங்கி வந்த நாரதர் தேவகுருவிற்கு இந்திரன் சிறை இருக்கும் இடத்தை காட்டி நடந்ததை கூறனார்.தேவர்களும் தேவ குருவும் மிகவும் அஞ்சி செய்வதறியாது திகைத்து பின் தெளிவு பெற்று ஈசனை பலவாறு துதி செய்து இந்திரனை பொறுத்தருளுமாறு வேண்டினர்.ஈசன் இந்திரனை அழைத்து வர சொல்லி அவனை நோக்கினார். இந்திரன் தலை கவிழ்ந்த முகத்துடன் தனக்கு நேரிட்ட வினையை நினைத்து அழுது அடிவணங்கி நின்றான். இறைவன் திருவுள்ளத்தில் உணர்ந்து நீ வேதகிரி தலத்தை அடைந்து பூசித்தால் வினை நீங்கும் நீ அங்கு செல்வாயாக என அருள் செய்த்தார். இந்திரன் அவ்வாறே வேதகிரியை அடைந்தது பூசை செய்தது தன்னுடைய குற்றங்கள் நீங்க பெற்று வானுலகை அடைந்தான்.அது முதல் ஐந்து யோசனை தூரமுள்ள இந்த வட்டம் இந்திரபுரி என பெயர் பெற்றது.