இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
பிரம்மன் சாவித்திரி சரஸ்வதி இரு மனைவியரில் சாவித்ரியை நீங்கி சரஸ்வதியை பிரியாமல் இருந்தான் சாவித்திரி தன்னைவிட்டு நீங்கி இருத்தலை கண்டு வெறுத்து வேதங்கள் உபநிடந்தங்களின் பகுப்புடன் உன்னை விட்டு நீங்ககடவது என்று சாபம் இட்டு ஏழு முனிவர்கள் இடத்திற்கு சென்று தவம் இயற்றினாள். சாவித்திரி இட்ட சாபத்தினால் பிரம்மன் ஒளி செயலும் இழந்திருந்தான். அவ்வாறு இருந்த பிரம்மனை மது கயிடவர்கள் எனு அரக்கர்கள் துன்புறுத்த தொடங்கினர். பிரம்மன் மனதிலும் நினைக்க முடுயாத துயரங்கொண்டுபார்கடலினடத்து சென்று திருமால் துயிலதற்குகேதுவாகிய மாய சக்தியை துதித்து தொழுதார்.
திருமாலைத் தொழுது மதுகடையவர்களால் தான் துன்புறுத்தலை கூறி முறையிட்டார்.திருமால் வில்லை எடுத்து அவர்களுடன் பல ஆண்டுகள் போர் செய்து அவர்ளை கொன்றார்.பிறகு பிரமனிடம் சாவித்திரி பிரிந்தமை முதலிய வுணர்ந்த பிரம்மன் செய்த அறியாமையை உணர்த்தி வேதகிரியில் ஈசன் உமையுடன் இரு மைந்தர்களும் வீற்றிருக்கின்றனர்.அங்கு சென்று வழிபடுக என்று அருளினார். பிரம்மன் அவ்வாறே வேதகிரியை அடைந்து ஈசனை பூசித்து பலவாறு துதித்து வேதகிரிஸ்வரர் அருளினால் சாவித்திரியின் சாபம் நீங்கி சாவித்திரியுடன் சத்யலோகம் சென்றார்.அன்று முதல் இந்த பதிக்கு பிரம்மபுரி என்ற பெயரும் உண்டாகியது.