இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
மன்னனே திருமால் பிரம்மன் இந்திரன் பதவியில் இருப்பதை பார்க்கிலும் இத்தலத்தை சூழ்ந்த சோலையில் பிறந்தாலே சிறந்தது. இத்தகைய தலத்தில் பசுவதை செய்துவிட்டு பரிகாரமும் செய்யாமல் செல்கின்றனை நீ சூர்ய குளத்தில் உதித்த மன்னன் ஆதலால் உம மீது இரக்கம் கொண்டு வேதகிரிசரை தொழுது பூசித்தல் வேண்டும் என்று சம்பு ஆதி எனும் முனிவர்கள் மீட்ப சரகுரு மன்னன் திரும்பினான் சேனையும் திரும்பி நடந்தன. மன்னன் திருகழுகுன்றத்தில் சென்ற அளவில் அத்திருகளுகுன்ற மலையை கடல் சூழ்ந்தது போல் மன்னனின் தானைகடல் சூழ்ந்தது.சரகுறு மலையை சூழ்ந்துள்ள காட்டினை கடந்து தேரை விரட்டி களுக்கு முனிவர்களின் அருளாகிய நிழலை பெற்றுக்கொண்டு வானில் விழல் செய்யும் தன் குடை நிழலை மாற்றி பின்னாலே சேனையை நிறுத்தி விட்டு அமைச்சனுடன் மலை மீது ஏறினான்.முன்னாளில் வேதகிரிசன் திருவடிகளை பணிந்த பனிரு சூர்யர்களும் தங்கள் குலத்தில் ஒரு மன்னர் வடிவாய் பின்பும் வேதகிரியை பூசிக்க வந்தது போல் அணிகள் விளங்கும் படி போனான். கழுகு உருவமாயிருகிற முனிவர்களால் கொள்ள கேள்விப்பட்டு அந்த பெரிய மலையினுடைய அடி நாடு முடி என்னும் மூன்றிடத்திலும் மூன்று சிவலிங்கம் ஸ்தாபித்து ஆகம விதிப்படி பூசை செய்து வணங்கினான்.அன்பு செய்து துதி செய்கின்ற அந்த அரசன் இன்பம் அடையும் படி சிரசில் நின்றும் காக்கை வடிவமாய் வன்மையுற பறந்து வேதகிரியின் தென்திசை மலையில் போய் விழுந்தது. சரகுரு மன்னனின்
பாவம் காக்கை வடிவமாய் எதிரில் உள்ள குன்றின் விழுந்ததால் அக்குன்று காக்கை குன்று எனும் பெயர் பெற்றது. மன்னனுடைய சேனைகள் களிபடைந்தன. அபொழுது கண்ட உலகத்தாரும் அவர்களும் அன்றி அவர்களுடைய இருபத்தொரு தலைமுறையாரும் நரகத்தினின்று நீங்கினார்கள். அத்தன்மையை கண்டு அதிசயித்த அமைச்சரானவன் அப்பொழுதே ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து தூய்மை உள்ள நீரினால் திருமஞ்சனம் செய்து துதித்தான் அவனுடைய பாவங்கள் எல்லாம் மறைந்தன.