பாடல் எண் : 1(1112)
தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும் நாடுடையா னள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 2
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம் காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 3
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 4
துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம் இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக் கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 5
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 6
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும் கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 7
ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 8
இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 9
தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம் சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர் காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 10
கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே...
பாடல் எண் : 1
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவ வினைகள்தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம் கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
பாடல் எண் : 2
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றை சடைய னெங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளை யருவித் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 3
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம் வினைகள் அல்கி யழிந்திடத் தோளு மெட்டு முடைய மாமணிச் சோத்யான் காள கண்டனுறையுந் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 4
வெளிறு தீரத் தொழுமின் வென்பொடி யாடியை முளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 5
புலைகள் தீர தொழுமின் புன்சடைப் புண்னியன் இலைகொல் சூலப் படைய னெந்தை பிரானிடம் முலைகளுண்டு தழுவி புறவில் குட்டியொடுமுசுக் கலைகள் பாயும் புரவிற் புறவில் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 6
மடமு டைய அடியார் தம்மனத் தேயுற விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன் படமு டைய அரவன் டான்பயி லும்மிடம் கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 7
ஊன மில்ல அடியார் தம்மனத்தேயுற ஞான மூர்த்தி நட்ட மாடி நவிலும்மிடம் தேனும் வண்டும் மதுவுன் டின்னிசை பாடியே கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 8
அந்த மில்லா அடியார் தம்மனத் தேயுற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே கந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 9
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் தானுறை யும்மிடம் மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 10
பல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை யருவித் தண்கழு குன்றினை மல்லின் மல்கு திறன்தோ ளுரன் வனப்பினால் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
பாடல் எண் : 1
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு மான்உன் நாமங்கள் பேசுவார்க்(கு) இணக்கி லாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணாக்கி லாததோர் வித்து மேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 2
பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்திலாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் சிட்டனேசிவ லோகனே சிறு நாயி னுங்கடை யாய வெங் கட்ட னேனையும் ஆட்கொள் வாள் வான்வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 3
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி மலங்கெ டுத்த பெருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவ தறிந்திலேண் இலங்கு கின்றநின் சேவடிகள் இரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காமலே வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 4
பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாள்தொறூம் போற்றவும் நாணொ ணாததொர் நானம் எய்தி நடுக்கடலுள் அழுந்தி நான் பேணொ ணாதபெ ருந்துறைப் பெருந் தோணி பற்றி யுகைத்தலுங் காணொ ணாத்திருக் கோலம் நீவந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 5
கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்த சிகாமனி ஞாலமேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடிங் கால மேஉனை ஒதநீ வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 6
பேதம் இல்லாதொர் கற்ப ளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதிலார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லால்உனை ஓத நீ வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
பாடல் எண் : 7
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம் செய்த ஈசனே மயக்க மாயதோர் மும்ம லப்பழ வல்வி னைக்கள் அழுந்தவும் துயக்க றுத்தனை ஆண்டு கொண்டு நின் தூய்ம லர்க்கழல் தந்தெனைக் கயக்க வைத்தடி யார்முனே வந்து காட்டினாய்கழுக் குன்றிலே
திரு மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது)
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க (5)
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் (75)
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் (80)
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று (85)
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உன்மையில் உள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழந்த திரு ஆல வாயான் திருநீறே
முக்தி தருவது நீறு முணிவரணீவது நீறு சத்யம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பக்தி தருவது நீறு பரவ இனியது உள்ளது நீறு சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே
கான இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மானந் தகைவது நீறு மதியை தருவது நீறு சேணந் தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே
பூச இனியது நீறு புன்னியம் தருவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோற்களுக்கெல்லாம் ஆசைகெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திருநீறே
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் நீறு திருத்தகு மாளிகை சூழ்ந்தsச் திரு ஆல வாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலி தரு சூலத் தால வாயான் திருநீறே
இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே
இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே
மாலொ டயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வென்பொடி நீறு ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம் துண்டமிடற்றெம் ஆல வாயான் திருநீறே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது மேலுறை நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளாரேத்துங் தகையது நீறு அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆல வாயான் திருநீறே
ஆற்றல் அடல்விடையேரும் ஆல வாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தோற்றித்தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
திருச்சிற்றம்பலம்