திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) நான்கு வேதங்களே நான்கு உச்சிகளாகக் கொண்ட மலையாக அமைந்துள்ள இடம். வேதகிரீஸ்வரர் கோயில் (Vedhagiriswarar Temple) திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று. இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) பாவங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்து பிறவியில்லா பேரின்பத்தைக் கொடுக்கத்தக்கதாய் சிறப்புற்று விளங்குகிறது. திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் - திருக்கழுக்குன்றத்தை (Thirukalukundram) பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் (Vedhagiriswarar Temple) கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பதும் திருமலையை சுற்றி நந்தி பகவான் ஈசனை நோக்கி இருப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில்(Kanni Raasi) குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா (latcha deepam) நடைபெறும். புஷ்பகர மேளா மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம்(Sangutheertham) என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்லத்தில் (Vedhagiriswarar Temple) வேதகிரீஸ்வரர் சுயம்பு(Suyambu) மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) கழுகுகள் வழிபட்டதால் “கழுகாசலம்”, மகாவிஷ்னு வழிபட்டதால் “வேதநாரயனபுரி” எனவும், பிரம்மன் வழிபட்டதால் ”பிரம்மபுரி” எனவும், சாவித்திரியால் சபிக்கப்பட்ட பிரம்மதேவன் இத்தலத்தில் சாப விமோசனம் பெற்றதால் "இந்திரபுரி" எனவும், வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் (Thirukalukundram), எனும் பெயர்களுடன் "பட்சி தீர்தம்"(pakshi theertham) எனவும் வழங்கபடுகிறது. இறைவன்மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்குக் “மலைக்கொழுந்து” என்றும் பெயருண்டு.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்காண பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை)
காலை 9AM முதல் 12PM வரை, மாலை 4.30PM முதல் இரவு 7.30PM வரை திறந்திருக்கும்.
அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோயில் (தாழக்கோவில்)
காலை 6AM முதல் 12.30PM வரை, மாலை 4.30PM முதல் இரவு 8.30PM வரை திறந்திருக்கும்.
வ.எண் | தேதி | கிழமை | தமிழ் மாத தேதி | நிகழ்ச்சிகளின் விபரம் |
01 | 19/07/2024 | வெள்ளி / Friday | ஆடி 03 | பிரதோஷம் Prathosham |
02 | 20/07/2024 | சனி / Saturday | ஆடி மாதம் 04 | பௌர்ணமி கிரிவலம் / Pournami |
03 | 28/07/2024 | ஞாயிறு / Sunday | ஆடி மாதம் 12 | ஆடிபூரம் - விநாயகர் உற்சவம் Amman Thiruvizha Vinayakar Urchavam |
04 | 29/07/2024 | திங்கள் / MonDay | ஆடி மாதம் 13 | ஆடி திருவிழா கொடியேற்றம் Amman Thiruvizha Kodiytram |
04 | 29/07/2024 | திங்கள் / MonDay | ஆடி மாதம் 13 | முதல் நாள் காலை தொட்டி உற்சவம் |
04 | 29/07/2024 | திங்கள் / MonDay | ஆடி மாதம் 13 | முதல் நாள் இரவு தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
05 | 30/07/2024 | செவ்வாய் / Tuesdayy | ஆடி மாதம் 14 | இரண்டாம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
05 | 30/07/2024 | செவ்வாய் / Tuesdayy | ஆடி மாதம் 14 | இரண்டாம் நாள் இரவு தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
06 | 31/07/2024 | புதன் / Wednesday | ஆடி மாதம் 15 | மூன்றாம் நாள் காலை அதிகாரநந்தி வாகனம் Amman Thiruvizha |
06 | 31/07/2024 | புதன் / Wednesday | ஆடி மாதம் 15 | மூன்றாம் நாள் இரவு சந்திர பிரபை வாகனம் Amman Thiruvizha |
07 | 01/08/2024 | வியாழன் /Thursday | ஆடி மாதம் 16 | நான்காம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
07 | 01/08/2024 | வியாழன் /Thursday | ஆடி மாதம் 16 | நான்காம் நாள் இரவு நாக வாகனம் Amman Thiruvizha |
08 | 02/08/2024 | வெள்ளி / Friday | ஆடி மாதம் 17 | ஐந்தாம் நாள் காலை கதலி வாகனம் Amman Thiruvizha |
08 | 02/08/2024 | பெள்ளி / Friday | ஆடி மாதம் 17 | ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகனம் Amman Thiruvizha |
09 | 03/08/2024 | சனி / Saturday | ஆடி மாதம் 15 | ஆறாம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
09 | 03/08/2024 | சனி / Saturday | ஆடி மாதம் 15 | ஆறாம் நாள் இரவு யானை வாகனம் Amman Thiruvizha |
10 | 04/08/2024 | ஞாயிறு /Sunday | ஆடி மாதம் 15 | ஏழாம் நாள் காலை திருத்தேர் Amman Thiruvizha |
11 | 05/08/2024 | திங்கள் / Monday | ஆடி மாதம் 15 | எட்டாம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
11 | 05/08/2024 | திங்கள் / Monday/b> | ஆடி மாதம் 15 | எட்டாம் நாள் இரவு குதிரை வாகனம் Amman Thiruvizha |
12 | 06/08/2024 | செவ்வாய் / Tuesday | ஆடி மாதம் 15 | ஒன்பதாம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
12 | 06/08/2024 | செவ்வாய் / Tuesday | ஆடி மாதம் 15 | ஒன்பதாம் நாள் இரவு தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
13 | 07/08/2024 | புதன் / Wednesday | ஆடி மாதம் 15 | பத்தாம் நாள் காலை தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
13 | 07/08/2024 | புதன் / Wednesday | ஆடி மாதம் 15 | பத்தாம் நாள் காலை தசங்கு தீர்த்த தீர்த்தவாரி Amman Thiruvizha |
13 | 07/08/2024 | புதன் / Wednesday | ஆடி மாதம் 15 | பத்தாம் நாள் இரவு தொட்டி உற்சவம் Amman Thiruvizha |
14 | 08/08/2024 | வியாழன் / Thursday | ஆடி மாதம் 23 | திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழு அபிஷேகம் Amman Thiruvizha |
14 | 08/08/2024 | வியாழன் / Thursday | ஆடி மாதம் 23 | பத்தாம் நாள் இரவு திருக்கல்யாணம் Amman Thiruvizha |