திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கும் சங்கு 07-03-2024 அன்று பிறந்துள்ளது... மார்க்கண்டேயருக்காக இறைவன் அருளியது..அன்று தொடங்கி இன்று வரை சங்கு தீர்த்த குளத்தில் பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை திருவருளால் சங்கு பிறக்கிறது.
சசங்கு தீர்த்த குளத்தில் தோன்றிய 'பொக்கிஷம்'.. மகா சிவராத்திரி முந்தைய நாளில் திருக்கழுக்குன்றம் அருள்மிகு ஸ்ரீ #வேதகிரீஸ்வரர் திருக்கோவில், சங்கு தீர்த்த குளத்தில், சங்கு பிறந்துள்ளது. (07.03.2024 வியாழக்கிழமை) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதால் இந்தக் குளத்திற்கும் சங்கு தீர்த்தக் குளம் என்று பெயர் உருவானது. பொதுவாக சங்குகள் கடல் நீரிலே அதிகம் வாழும், குளங்களில் வாழ்ந்து மீண்டும் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்து வருவது நாட்டிலேயே இங்குதான் முதன் முறையாகும். கடைசியாக 2011 ஆம் ஆண்டு சங்கு பிறந்தது குறிப்பிடத்தக்கது.
மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார். இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.
ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான். பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.
1-9-2011அன்று உருவான சங்கு அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.
இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள். சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ வாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது.