தெய்வீகம் கமழும் ஊர்களை மூன்று வகையாக குறிப்பிடுவது வழக்கம், அவை மூர்த்தி சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு இவை மூன்றிலும் இத்திருக்கோவில் சிறந்து விளங்குகிறது. இங்கு ரிக் வேதம் வேராகவும், யஜுர் வேதம் மத்தியாகவும், சாம வேதம் அடியாகவும், அதர்வன வேதம் சிகரமாகவும் அமைந்ததால் இம்மலைக்கு (Vedhagiriswarar Temple) வேதகிரி என பெயர் பெற்றது. இந்த ஆலய மூலஸ்தானம் மூன்று பெரிய பாறைகளால் ஆக்கப்படிருக்கிறது. கருவறை உட்பக்க சுவர்களில், மேற்கில் சோமாஸ் கந்தரும், பிரம்மாவும், திருமாலும், வடக்கில் யோக தட்சிணா மூர்த்தியும், மார்க்கண்டேயர் சிவலிங்க பூசையும், தெற்கில் நந்திகேசுவரர், சண்டிகேசுவரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வேதகிரிஸ்வரர்(Vadhagiriswarar) அருள்பாலிக்கிறார். இந்த அதர்வண வேதமலை உச்சி மீது சுயம்பு உருவில் (தானாக மணலால் தோன்றியது) அமைந்த லிங்க ரூபம், காலத்தாலும் அபிஷேகம், பூஜை மற்றும் நீராலும் கரையாமல் இருக்க கவசம் அளிக்கப்பட்ட திருவுருவம், மலை மீது அமைந்த இறைவனுக்கு மலைக்கொழுந்து என்ற திருநாமமும் உண்டு. இந்த தலத்தில்(Vedhagiriswarar Temple) கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கு இல்லாமல் இருப்பது சிறப்பு அம்சமாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்.
அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருட்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுர சுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேகத்தில் வணங்கினால் பாவம் போக்கி நல்லன நடக்கும்.இங்கு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
ஆதியில் பரம சிவத்த்திடமிருந்து தோன்றி அவர் உருவம் எல்லாமாகி அனந்த பேதங்கள் உள்ள வேதங்கள் மிகுந்த அன்புடன் பரமசிவம் எழுந்தருளி உள்ள வெள்ளி மலையை அடைந்து பரமசிவனாரை தொழுது இறைவனே தேவரீரையல்லாத தேவர்கள் முனிவர்கள் பிரம்மதேவன் முதலானவர்கள் விரிவாய் இருக்கிற ஈன்கள் விரிவு அடங்காது போலும் அவர்கள் எங்களை காக்க மாட்டார்கள். எந்நாளும் மலையாய் நின்ற எங்களை பிரம்ம தேவன் நான்கு பிரிவாக செய்தான்.பரத்வாசன் காயத்திரியாக செய்தான்.முனிவர்கள் ஒரு எழுத்தாகவும் ஐந்து எழுத்ததாகவும எட்டு் எழுத்தாகவும் செய்த்தார்கள். இவ்வாறு அடியேம் வெவ்வேறு பட்டோம். எங்களை முழுவதும் ஒதுக்கின்றவர்களை காண்கிலேம்.பிரளய காலத்திலும் அழியாத உறுதி உள்ள பூலோகத்தினிடத்து நாங்கள் ஆறங்களுடன் ஒன்றுபட்டு தேவரீருடைய திருவடியின் கீழ்நிலை பெற்றிருத்தல் வேண்டும் என வேண்டி துதித்தன. பரமசிவனார் வேதங்களை நோக்கி பூமியினிடத்தில் உங்கள் அங்க பேதங்களுடன் சென்று ஒரு கிரி வடிவமாய் நில்லுங்கள் அவ்வண்ணம் இருந்தால் அங்கே உங்கள் கொழுந்து போல நாம் அடைகிறோம். சிவலிங்கத்தின் வடிவமாய் அடைந்து உங்களால் செய்யப்பட்ட பூசையை ஏற்று நம்முடைய மாயையினால் நம்மை தோழ பெறாதவர்களுக்கும் உங்கள் பொருட்டு ஞான சொருபமாக விளங்கி கொண்டிருப்போம் உங்களுக்கு வேதகிரியெனபெயருண்டகும் என்று அருளசெய்தார்.சிவபெருமான் கட்டளை படி அந்த வேதங்கள் பூவுலகின் வந்து வேதகிரியானது. இங்கு ரிக் வேதம் வேராகவும், யசுர் வேதம் மத்தியாகவும்,சாம வேதம் அடியாகவும், அதர்வன வேதம் சிகரமாகவும் கற்பமென்பது அதின் குகையாகவும் தீட்சை என்பது பசியதளிருள்ள கொடிகளாகவும் தங்களுடன் ஒன்றுபட்டு சேர்ந்திருக்கும் படி வேதங்கள் கிரி வடிவாகியது.வேதகிரியின் உச்சியில் மலைக்கொலுந்தாய் இறைவன் வேதகிரிஸ்வரர் எழுந்தருளினார். இம்மலைக்கு (Vedhagiriswarar Temple) வேதகிரி என பெயர் பெற்றது.
ஒரு நாவால் உலகை ஆண்ட திருஞாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும் , தம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகளும், தெய்வத்திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரிநாதரும் பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.
மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.
வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami girivalam)போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மலை வலம் வரும் வழியில் மருந்து மலைச்சாரல் சஞ்சீவி காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை சங்கு தீர்த்தத்தில் நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை திருமலை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது