சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.
பெயர்: திருநாவுக்கரசு சுவாமிகள் குலம்: வேளாளர் பூசை நாள் : சித்திரை சதயம் அவதாரத் தலம் : ஆமூர் முக்தித் தலம் :
தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.
பெயர்: தில்லைவாழ் அந்தணர்: குலம்: அந்தணர்: பூசை நாள் : அவதாரத் தலம் : சிதம்பரம் முக்தித் தலம் : சிதம்பரம்
சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.
பெயர்: திருநீலகண்டர் குலம்: பாணர் பூசை நாள் :தை விசாகம் அவதாரத் தலம் : சிதம்பரம் முக்தித் தலம் : தில்லைப்புலீச்சரம்
யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
பெயர்: இயற்பகை நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்:மார்கழி உத்திரம் அவதாரத் தலம்:பல்லவனீச்சரம் முக்தித் தலம்:சாய்க்காடு
வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்..
பெயர்: மாறநாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஆவணி மகம் அவதாரத் தலம்: இளையான்குடி முக்தித் தலம்: இளையான்குடி
அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.
பெயர்: மெய்ப்பொருள் நாயனார்: குலம்: வேளாளர் பூசை நாள் : அவதாரத் தலம் : திருக்கோவலூர் முக்தித் தலம் : திருக்கோவலூர்
தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.
பெயர்: விறன்மிண்ட நாயனார்: குலம்: வேளாளர். பூசை நாள் : செங்கண்ணூர் அவதாரத் தலம் : முக்தித் தலம் : ஆரூர்/வண்டாம்பாளை
அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்..
பெயர்: அமர்நீதி நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்: ஆனி பூரம் அவதாரத் தலம்: பழையாறை முக்தித் தலம்: திருநல்லூர்
சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்..
பெயர்: எறிபத்த நாயனார்ங குலம்: அறியப்படவில்லை பூசை நாள்: மாசி ஹஸ்தம் அவதாரத் தலம்: கருவூர் முக்தித் தலம்: கருவூர்
வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..
பெயர்: ஏனாதி நாத நாயனார் குலம்: சான்றார் பூசை நாள்: புரட்டாசி உத்திராடம் அவதாரத் தலம்: ஏனநல்லூர் முக்தித் தலம்: ஏனநல்லூர்
சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.
பெயர்: திண்ணன் குலம்: வேடர் பூசை நாள்: தை மிருகசீருஷம் அவதாரத் தலம்: உடுப்பூர் முக்தித் தலம்: திருக்காளத்தி
நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்..
பெயர்: கலயனார் குலம்: அந்தணர் பூசை நாள்: ஆவணி மூலம் அவதாரத் தலம்: திருக்கடவூர் முக்தித் தலம்: திருக்கடவூர்
நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்..
பெயர்: தாயனார் குலம்: வேளாளர் பூசை நாள் :தை திருவாதிரை அவதாரத் தலம்:கணமங்கலம் முக்தித் தலம்:கணமங்கலம்
பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்..
பெயர் : ஆனாயர் குலம்: இடையர் பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம் அவதாரத் தலம் :திருமங்கலம் முக்தித் தலம் :திருமங்கலம்
சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்..
பெயர்: மூர்த்தி நாயனார்: குலம்: வணிகர் பூசை நாள் : ஆடி கார்த்திகை அவதாரத் தலம் :மதுரை முக்தித் தலம் : மதுரை
தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.
பெயர்: முருக நாயனார்: குலம்: அந்தணர் பூசை நாள் : வைகாசி மூலம் அவதாரத் தலம் : திருப்புகலூர் முக்தித் தலம் : நல்லூர்ப் பெருமணம்
நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
பெயர்: உருத்திர பசுபதி நாயனார் குலம்: அந்தணர் பூசை நாள்: புரட்டாசி அசுவினி அவதாரத் தலம்: தலையூர் முக்தித் தலம்: தலையூர்
பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
பெயர்: திருநாளைப் போவார் (நந்தனார் ) குலம்: புலையர் பூசை நாள் : புரட்டாசி ரோகிணி அவதாரத் தலம் : ஆதனூர் முக்தித் தலம் : தில்லை
சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.
பெயர்: விசாரசருமர் குலம்: அந்தணர் பூசை நாள்: தை உத்திரம் அவதாரத் தலம்: திருசேய்ஞலூர் முக்தித் தலம்: ஆப்பாடி
தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
பெயர்:திருக்குறிப்புத் தொண்டர்: குலம்: ஏகாலியர். பூசை நாள் : சித்திரை சுவாதி அவதாரத் தலம் : திருக்கச்சி முக்தித் தலம் : திருக்கச்சி
கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர் .
பெயர்: குலச்சிறை நாயனார் குலம்: மரபறியார் பூசை நாள்: ஆவணி அனுஷம் அவதாரத் தலம்:.மணமேற்குடி முக்தித் தலம்: மதுரை
சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
பெயர்: பெருமிழலைக் குறும்ப நாயனார்: குலம்: குறும்பர் பூசை நாள் : ஆடி சித்திரை அவதாரத் தலம் : மிழலை/ஆரூர் முக்தித் தலம் : மிழலை/ஆரூர்
சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.
பெயர்: காரைக்கால் அம்மையார் குலம்: வணிகர் காலம்: கி.பி. 300-500 பூசை நாள்: பங்குனி சுவாதி அவதாரத் தலம்: காரைக்கால் முக்தித் தலம்: திருவாலங்காடு
திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்..
பெயர் : அப்பூதியடிகள் நாயனார் குலம் : அந்தணர் பூசை நாள் :தை சதயம் அவதாரத் தலம் :திங்களூர் முக்தித் தலம் :திங்களூர்
ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
பெயர்: திருநீல நக்க நாயனார்: குலம்: அந்தணர் பூசை நாள் : வைகாசி மூலம் அவதாரத் தலம் : சாத்தமங்கை முக்தித் தலம் : நல்லூர்ப் பெருமணம்
தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
பெயர்: நமிநந்தியடிகள் நாயனார்: குலம்: அந்தணர் பூசை நாள் : வைகாசி பூசம் அவதாரத் தலம் : ஏமப்பேறூர் முக்தித் தலம் : ஆரூர்
பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர். .
பெயர்: திருஞானசம்பந்தர்: குலம்: அந்தணர் பூசை நாள் : வைகாசி மூலம் அவதாரத் தலம் : முக்தித் தலம் :
சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.
பெயர்: கலிக்காம நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஆனி ரேவதி அவதாரத் தலம்: பெருமங்கலம் முக்தித் தலம்: பெருமங்கலம்
கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்..
பெயர்: திருமூல நாயனார்: குலம்: இடையர். பூசை நாள் : ஐப்பசி அசுவினி அவதாரத் தலம் : சாத்தனூர் முக்தித் தலம் : திருவாவடுதுறை
திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..
பெயர்: தண்டியடிகள்: குலம்: செங்குந்தர் பூசை நாள் : பங்குனி சதயம் அவதாரத் தலம் : ஆரூர் முக்தித் தலம் : ஆரூர்
சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
பெயர்: மூர்க்க நாயனார்: குலம்: வேளாளர். பூசை நாள் : கார்த்திகை மூலம் அவதாரத் தலம் : வேற்காடு முக்தித் தலம் : குடமூக்கு
சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
பெயர்: சோமாசி மாற நாயனார்: குலம்: அந்தணர் பூசை நாள் : வைகாசி ஆயிலியம் அவதாரத் தலம் : அம்பர் முக்தித் தலம் :ஆரூர்
புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.
பெயர்: சாக்கிய நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: மார்கழி பூராடம் அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை முக்தித் தலம்: திருச்சங்கமங்கை
திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.
பெயர்: சிறப்புலி நாயனார் குலம்: அந்தணர் பூசை நாள்: கார்த்திகை பூராடம் அவதாரத் தலம்: ஆக்கூர் முக்தித் தலம்: ஆக்கூர்
சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.
பெயர்: பரஞ்சோதியார் குலம்: மாமாத்திரர் பூசை நாள்: சித்திரை பரணி அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி
உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்..
பெயர்: கழறிற்றறிவார் நாயனார் குலம்: அரசர் பூசை நாள்: ஆடி சுவாதி அவதாரத் தலம்: கொடுங்கோளூர் முக்தித் தலம்: திருவஞ்சை
சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.
பெயர்: கணநாத நாயனார் குலம்: அந்தணர் பூசை நாள்: பங்குனி திருவாதிரை அவதாரத் தலம்: காழி முக்தித் தலம்: காழி
சபஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.
பெயர்: கூற்றுவ நாயனார் குலம்: மன்னன் பூசை நாள்: ஆடி திருவாதிரை அவதாரத் தலம்: களப்பால் முக்தித் தலம்: தில்லை
சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்
பெயர்: பொய்யடிமையில்லாத புலவர்: குலம்: பூசை நாள் : அவதாரத் தலம் : முக்தித் தலம் :
எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர். நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்..
பெயர்: புகழ்ச் சோழர்: குலம்: மரபறியார் பூசை நாள் : ஆடி கார்த்திகை அவதாரத் தலம் : உறையூர் முக்தித் தலம் : கருவூர்
நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.
பெயர் : அதிபத்த நாயனார் குலம் : பரதவர் பூசை நாள் :ஆவணி ஆயில்யம் அவதாரத் தலம் :திருநாகை முக்தித் தலம் :திருநாகை
தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
பெயர்: கலிக்கம்ப நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்: தை ரேவதி அவதாரத் தலம்: திருப்பெண்ணாகடம் முக்தித் தலம்: திருப்பெண்ணாகடம்
தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.
பெயர் : கலிய நாயனார் குலம்: செக்கார் பூசை நாள் : ஆடி கேட்டை அவதாரத் தலம்: திருவொற்றியூர் முக்தித் தலம் : திருவொற்றியூர்
சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
பெயர்: சத்தி நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஐப்பசி பூரம் அவதாரத் தலம்: வரிஞ்சையூர் முக்தித் தலம்: வரிஞ்சையூர்
ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.
பெயர்: ஐயடிகள் காடவர்கோன் குலம்: குறுநில மன்னர் பூசை நாள்: ஐப்பசி மூலம் அவதாரத் தலம்: காஞ்சி
சிவாலயத்தில் திருவிளக்கேற்றி வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.
பெயர்: கணம்புல்ல நாயனார் குலம்: செங்குந்தர் பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை அவதாரத் தலம்: பேளூர் முக்தித் தலம்: தில்லை
“காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.
பெயர்: காரி நாயனார் குலம்: அந்தணர் பூசை நாள்: மாசி பூராடம் அவதாரத் தலம்: திருக்கடவூர் முக்தித் தலம்: திருக்கடவூர்
கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.
பெயர்: நின்றசீர் நெடுமாறன்: குலம்: அரசர். பூசை நாள் : ஐப்பசி பரணி அவதாரத் தலம் : மதுரை முக்தித் தலம் : மதுரை
சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர். .
பெயர்: வாயிலார்: குலம்: வேளாளர் பூசை நாள் : மார்கழி ரேவதி அவதாரத் தலம் :திருமயிலை முக்தித் தலம் :
கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.
பெயர்: முனையடுவார் நாயனார்: குலம்: வேளாளர் பூசை நாள் : பங்குனி பூசம் அவதாரத் தலம் : நீடூர் முக்தித் தலம் : நீடூர்
போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
பெயர்: கழற்சிங்க நாயனார் குலம்: குறுநில மன்னர் பூசை நாள்: வைகாசி பரணி அவதாரத் தலம்: திருக்கச்சி முக்தித் தலம்: திருக்கச்சி
சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.
பெயர்: இடங்கழி நாயனார் குலம்: வேளிர் பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை அவதாரத் தலம்: கொடும்பாளூர் முக்தித் தலம்: கொடும்பாளூர்
கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.
பெயர்: செருத்துணை நாயனார்: குலம்: வேளாளர் பூசை நாள் : ஆவணி பூசம் அவதாரத் தலம் : கீழ்த்தஞ்சை முக்தித் தலம் : ஆரூர்
சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.
பெயர்: புகழ்த்துணை நாயனார்: குலம்: ஆதி சைவர் பூசை நாள் : ஆவணி ஆயிலியம் அவதாரத் தலம் : அரிசிற்கரைப்புத்தூர் முக்தித் தலம் :
சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
பெயர்: கோட்புலி நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஆடி கேட்டை அவதாரத் தலம்: திருநாட்டியத்தான் முக்தித் தலம்: திருநாட்டியத்தான்
மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர். .
பெயர்: பூசலார் நாயனார்: குலம்: அந்தணர். பூசை நாள் : ஐப்பசி அனுஷம் அவதாரத் தலம் : திருநின்றவூர் முக்தித் தலம் : திருநின்றவூர்
நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.
பெயர்: மங்கையர்க்கரசியார்: குலம்: மரபறியார்-அரசர் பூசை நாள் : சித்திரை ரோகிணி அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை) முக்தித் தலம் : மதுரை
சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.
பெயர்: நேச நாயனார்: குலம்: சாலியர் பூசை நாள் : பங்குனி ரோகிணி அவதாரத் தலம் : காம்பீலி முக்தித் தலம் : ஆரூர்
திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.
பெயர்: கோச்செங்கணா சோழர் குலம்: அரசன் பூசை நாள்: மாசி சதயம் அவதாரத் தலம்: திருவானைக்கா முக்தித் தலம்: தில்லை.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.
பெயர்: சடைய நாயனார் குலம்: ஆதி சைவர் பூசை நாள்: மார்கழி திருவாதிரை அவதாரத் தலம்: திருநாவலூர் முக்தித் தலம்: திருநாவலூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்..
பெயர்: இசைஞானியார் பால்: பெண் குலம் : ஆதி சைவர் பூசை நாள்: சித்திரை சித்திரை அவதாரத் தலம்: திருவாரூர் முக்தித் தலம்: திருநாவலூர்
சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.
பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார் குலம்: ஆதி சைவர் பூசை நாள்: ஆடிச் சுவாதி அவதாரத் தலம்: திருநாவலூர் முக்தித் தலம்: திருநாவலூர்
தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.
பெயர்: மானக்கஞ்சாறன்: குலம்: வேளாளர் பூசை நாள் :மார்கழி சுவாதி அவதாரத் தலம் : கஞ்சாறூர் முக்தித் தலம் : கஞ்சாறூர்